
எனக்கு அழகான தலை முடி .
சுருள் சுருளாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை முடி திருத்தகம் சென்றேன்.
எனக்கு முன்பே பலர் காத்திருந்தனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி முடி இருந்தது.
என் முறை வந்தது.
முடிவெட்டிக் கொண்டு பணம் செலுத்திக் கொண்டிருந்த போது,
விளக்குமாற்றோடு வந்த பணியாளர்
எல்லா மயிரையும் பெருக்கி ஒன்றாக்கி
குப்பைத் தொட்டியில் போட்டார்.

தன் முடி குறித்த செருக்கு எல்லா மயிரோடும் சேரும்போது அடிபட்டுவிடுகிறது