
உண்ணும்
மட்டும் அல்ல
உடுக்கும் உடை
மட்டும் அல்ல
இருக்கும் இடம்
மட்டும் அல்ல
எண்ணும் எண்ணமும்
எவரோ விதைத்தது தான்
எத்தனை பிறவிகள்
எத்தனை செயல்கள்
கருமையைப் பதிவாய்க்
கலந்து இருக்கும்
விதைகளின் வீர்யம்
வெளிப்படும் போது
நல்ல எண்ணமாம்
நல்ல விதைகளை
நாளைப் பிறவிக்கு
நாமும் விதைப்போம்
———————

விதைப்போம் என்னும் நம்பிக்கை தரும் அருமையான கவிதை