
புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டே நடந்தேன், இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா! இன்பம்!
சட்டச்சட பத்துத் தூற்றல்கள் – ஆஹா! ஆஹா!
பத்தே பத்துத் தூற்றல்தான் – பின்னர் புழுதியைக் கிளறிய
காற்று விசிற மழை ஓடி நகர்ந்துவிட்டது கரியவானம்
பிளந்து கொண்டு கோடை மின்னல் கீற்று என்னைத் தேடிற்று
கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடையின் கீற்று
என்னைத் தொட்டிருக்கும், உலகை அழித்திருக்கும்,
தினசரிச் செய்திகள் அற்றிருக்கும், தூற்றல் இன்பம்
மரத்திருக்கும், புழுக்கம் வெளி நிறைந்திருக்கும், புழுதி
எழுந்து படர்ந்திருக்கும், உலகம் ஒழிந்திருக்கும். நான்
தனியிருந்து என்ன செய்வதென்று கை நீட்டாதிருந்தேன்.
See less
