இரைச்சல்/க. நா. சு.

எங்கேயோ எட்டாத் தொலைவில் 

உருண்டு வரும் மீனதுவும்

 உலகையெலாம்

 எழுப்புகிறது, புல் வளரும்

வேகம் அது சந்தை இரைச்சலிலும்

பெரிதாகிக் கேட்கிறது.  கிழவன் ஒருவன்பக்கத்தறையிலே

 குந்தி அழுகிறான்.

யாரோ ஒருத்தி உதடசையாத

 வாய்

வம்பால் பெருந் தீ ஏற்றி வைத்தாள் :

மூண்ட குருக்ஷேத்திரம்

 காலத்தின் சந்து

பொந்துகளில் ஓடி ஒலிக்கிறது.குழந்தையொன்று

 தொட்டிலில் கிடந்து

மெல்ல உதடசைத்து

 ஊரை யெழுப்புறது

.

மரங்கள் துளிர்க்கும் ஓசை, பூக்கள்

பூக்கும் ஓசை, புழுக்கள் காலை உணவு

அருந்தும் ஓசை – இப்பேரிரைச்சலில்

என் சிந்தனைத் தேர் ஓட மறுத்துக்கிறீச்சிட்டு

 அசைந்தாடி நின்று அதிர்

வேட்டும் உலுக்குமரமும்

 கேட்கிறது.