காஞ்சிபுரம் மூன்று கவிதைகள்/அழகியசிங்கர்

I

காஞ்சிபுரம் 1

காஞ்சிபுரம்
கடுமையான வெயில்
சாமி தரிசனம்
போதும் போதும்

காஞ்சிபுரம் 2

காலையில்
காஞ்சிபுரம் போனேன்
திரும்பும்போது
காஞ்சிபுரத்தோடு
வந்தேன்

காஞ்சிபுரம் 3

காமாட்சி அம்மன்
கோயிலில்
காலடி எடுத்து வைத்தேன்
ஐயோ வெயில்
சுடச்சுட தொன்னையில்
சாம்பார் சாதம்
ஆறுதல் படுத்தியது