இனிக்கும் தமிழ் -136/டி வி ராதாகிருஷ்ணன்

கலிங்கத்துப் பரணி – விடுமின் பிடிமின்

அவனோடு ஊடல் கொண்டு கதவைத் திறக்காமல் இருக்கிறாள் அவள்.

அவளிடம் கெஞ்சுகிறான் அவன்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் போது, அவள் ஆடையை அவன் பற்றுவான்.அப்போது அவள்,
அய்யோ விடுங்கள் விடுங்கள் என்று மழலை மொழியில் கெஞ்சுவாள் அவனிடம். விடு
விடு என்று சொன்னாலும், அந்த இடத்தை விட்டு விலக மாட்டாள். அது என்னவோ,
விடாதே, பிடித்துக் கொள் என்று சொல்வது மாதிரி இருக்கிறது அவனுக்கு.
உண்மை கூட அதுதானோ என்னவோ.

அவள் அப்படி விலகிச் செல்லாமல் இருப்பது, அவனுக்கு அருள் செய்வது மாதிரி
இருக்கிறதாம்.

பாடல்
விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி
வெகுளி மென் குதலை துகிலினைப்
பிடிமின் என்றபொருள் விளைய நின்றருள்செய்
பெடைந லீர்கடைகள் திறமினோ

(நோ என்றால் நோ இல்லை என் கிறாரோ கலிங்கத்துப் பரணி பாடிய கவி)

One Comment on “இனிக்கும் தமிழ் -136/டி வி ராதாகிருஷ்ணன்”

Comments are closed.