நல்லது/அதங்கோடு அனிஷ்குமார்

உங்களைப்
பார்த்து இருக்கிறேன்.
இல்லை
யாரோ சொல்ல கேட்டிருக்கிறேன்.

பார்த்தும்
கேட்டும்
ஏதும் ஆகப்போவதில்லை.

பார்த்தது போல,
கேட்டது போல
இருந்து விட்டுப்
போனால் நல்லது

உங்களுக்கும்
எனக்கும்.

One Comment on “நல்லது/அதங்கோடு அனிஷ்குமார்”

Comments are closed.