
வீட்டுக்கு முன்னாலே
மரமல்லிக குல்மொகர்ன்னு
பூமரங்கள் வளக்கணும்
குல்மொகர் என்றால் சிவப்பின் முத்திரை
தோழர் செந்தாரகை சொன்னார்
அந்த மரங்களின் கீழ நடக்குறது
செங்கொடிகளின் அணிவரிச பாக்றது
மரமல்லிகை மலர்கள்
பொருத்தம் பார்த்து நழுவ விடும் தொங்கட்டான்கள்
இப்படி என் தொடக்கக்கால விருத்தப்பா ஒன்று
தூதுவளை போல் சிவப்பாய்ச்
சங்குப் பூப்போல நீலமாய்ப் பூக்கும் மரங்கள்
நான் மனை வாங்கி வீடு கட்டினால்
குடி இருப்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது
தன் துணைவியார் சொன்னதாய்
நண்பர் லோகியா சொன்னார்
அவுருக்கு வூடு எதுக்கு
மேடதானே வேணும்
( கொஞ்ச நேரம் கவிதைத் தொகுப்பிலிருந்து)
