சொடுக்குக் கதைகள்


அழகியசிங்கர்

1. நாள் விளையாட்டு போல் ஓடிக் கொண்டிருக்கிறது என்றேன்.எங்கே விளையாடினீர்கள் என்று கேட்டாள் மனைவி.

2. சொடுக்குக் கதை எழுத உட்கார்ந்தேன்.  பேனா எடுத்தேன். மை இல்லை.  எழுத பேப்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை.

3. தெரு முனையில் இருக்கும் பெரியவர் குட்டிப் போட்ட பூனை போல் சுற்றிக் கொண்டிருக்கிறார்.  என்ன பிரச்சினை அவருக்கு.

4. எப்படியும் பேசித் தீர்க்கத்தான் வேண்டுமென்ற முடிவுடன் அந்த வீட்டிற்குப் போய்க் கதவைத் தட்டினேன். கதவு பூட்டியிருந்தது.  யாரும் பதில் சொல்லத் தென்படவில்லை.

5. நமது புத்தகத்தைத் தயாரித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து கொடுக்கலாமென்றால் புத்தகமே தயாரிக்க முடியவில்லை. 

6. கடவுள் ஒருவர் இருக்கிறாரென்றால் என் முன்னால் வரச் சொல்லுங்கள் என்றேன்.  நான் இங்குதான் இருக்கிறேன் என்றார் எதிரிலிருப்பவர். 

One Comment on “சொடுக்குக் கதைகள்”

Comments are closed.