சொந்த ஜென் கதைகள்/பேயோன்

கல்வியின் போதாமை

குரு யான்ஷூ தியானம் செய்வதற்காக மடாலயத்திற்கு வெளியே நீண்ட தூரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சீடருக்கு யான்ஷூவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. ஒருமுறை யான்ஷூ தியானத்திற்குக் கிளம்பியபோது சீடர் அவரைப் பின்தொடர்ந்தார். குரு காட்டை விட்டு வெளியேறி ஊரில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தார். சிறிது நேரத்திற்குப் பின்பு அந்த வீட்டினுள் நுழைந்த சீடர், தமது குரு ஒரு பெண்ணுடன் தீவிர சல்லாபத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். “குருவே, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஏன், தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறாய்?” என்றார் யான்ஷூ.

“இன்மையை முழுமையால் நிரப்புகிறேன்” என்று குரு சொன்னதாகவும் ஐதீகம்