
ஞானம்
ஜேப்படித் திருடன்
ஜேபியில் கைபோட்டால்
என்ன கிடைக்கும்?
ஆராரோ இழுபறி செய்து
பொறுக்கிச் சேர்த்த
பைசாக்கள்!
என் கை விரல்!
நான்
கடற்கரையில் நண்டின்
காலடிச்சுவடு.
சுடர்விட்டுச் சுடும்
தார்ரோட்டில் தண்ணீர்.
குமரிச்சிறு பெண்ணின்
கூந்தலில் ஓர்கால்.
குளித்துவிட்டுச் சிலிர்க்கும்
காகத்தின் கூதல்.
செஞ்சோற்றுக் கடன் கழிக்க
சிவபெருமான் படும் பாடு.
எட்டுக்கால் பயணத்துக்கு
வெளிச்சமிடும் வானம்.
ஈஸிஜி காகிதத்தில்
எழுதிவைத்த கோடு.
நனைந்துவிட்ட ஈ
சிகரெட்டுப் புகை
நாற்காலி முதுகு
ஈசல் இறகு
நான்
முன்னும் பின்னும்
அன்றொரு நாள்,
ஆரியனாம் ராமனை
நம்பி நின்றாள்
சீதை
நடந்தாள் காட்டுக்கு.
பின்னொரு நாள்
பெரியவனாம் ராமனும்
ஈயத்திலிருக்கின்ற தங்கத்தைப்
பிரித்தெடுக்கும் எத்துடைய
ரசவாத
சித்தன் போல
தீயுக்குள்
புகச்செய்தான்
பெண்ணரசி தன்னை.
முகநூலில் வேலாயுத முத்துக்குமார்
