பாரதியே../குகா

/

பாரதம் வாழ பாடிய பாரதியே.செல்லமாவைக் கண்ணம்மா என்று அழைத்த பொன்மகனே.பெண்களை அடக்கி ஆண்ட காலங்களில் பிறந்து அடங்காதே கண்மணியே என்ற பெருங்கவியே.கல்வியின் கட்டாயத்தைப் பாடிய கவிஞனே.சாதி வெறியர்கள் சாட்டைகளால் அடித்த காலங்களில் சாதி ஒழிப்பை பற்றி பேசிய சிற்பியே.சிவசக்தியின் சித்திரம் பாடிய தெய்வீகனே.வீழ்வேனென்று நினைத்தாயோ என்று பாடிய வீரமகனே.நீ பிடித்த எழுதுகோல் என்ன தவம் செய்ததோ உன் கைவிரல்களைப் பற்றிக்கொள்ள.நின்னைச் சரணடைந்தேன் என பாடி எங்களை சரணடைய செய்தாயே.நீ இறந்தும் உன் புகழும் பாடல்களும் வீர நடை போட்டு கொண்டு தான் இருக்கிறது.உன் புகழ் ஓங்கட்டும் விண்ணுலகம் வரைக்கும்.