
பார்போற்றும் பாரதியே! உன்னை ஆண்டுக்கு இருமுறை நினைக்கிறோம்…எங்களை முன்
நிறுத்திக்கொள்ள.
உன்னை மேற்கோள்காட்டித்தான்
எங்கள் கவித்துவம் வாழ்கிறது.
வாழும்போது உன் கவிதைகளை
நூலாய்க் கொண்டுவர உன்னால்
முடியவில்லை…
இன்று கவிதைநூல்களை கூவிவிற்றாலும் கொள்வாரில்லை….
உன் இறந்தநாளைக்கூட சரியாய்
பதிவுசெய்யாது…உன்னைப்பற்றி
பேசிக்கொண்டிருக்கிறோம்.
வாழும்போது எந்தக்கவிஞன்தான் வாழ்ந்திருக்கிறான் சொல்.
ஊர் உலகத்திற்குகெல்லாம் கவலைப்பட்டுக் கவிதை எழுதினாய்…உன் குடும்பம் பற்றிய கவலை உனக்கில்லை.
இன்று நாங்கள் அரசாங்க ஓய்வூதியம் கணிசமாய் வந்தால்
கவிதைபடைக்கிறோம்” தமிள்”
தொண்டாற்ற….நாங்களும் வாழவேண்டாமா…
எப்படியோ….உன்போல் இன்று விவரமில்லாமல் யாருமில்லை என்பதில் ஆறுதல்தான்…
வரும் டிசம்பரில் உன்னைப்பற்றிஒரு கவிதை
எழுதிவிடவேண்டும்….
பின்ன நாங்களெல்லாம் கவிஞனென்று சொல்லிக்கொள்வது எப்படியாம்…?
♦அனங்கன்.

ஆகா
எதார்த்தம்👏