பாரதிதாசன் கூடவா வர மாட்டார்/ஜெயதேவன்

பாரதியின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 11பேர் அல்லது 12 பேர்தான் சென்றனர் என்பது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் மகாகவிக்கு
முற்றாக தமிழகம் உரிய மரியாதை தரவில்லை என்று
எடுத்துக் கொள்ள முடியாது. பாரதியின் முக்கிய சீடரான பாரதிதாசன் கூடவா வந்து கலந்திருக்க மாட்டார்.? குடும்ப நண்பரான இந்தியா பத்திரிகை தலைமை ஆசிரியரான சீனிவாச ஆச்சார்யா கூடவா வந்திருக்க மாட்டார்? தவறு

பாரதி மறைந்தது 1921 என்பதை மனதில் கொள்ள வேண்டும். அந்தக் கால சென்னை இந்த அளவு போக்குவரத்து இல்லை.
ஜட்கா வண்டிதான் பொதுப் போக்குவரத்து. நான் அறியவே 1978 சென்னை பல இடங்களில் காடு போல திரண்ட மரங்கள் இருந்தன.்எனில் 1921ல் எப்படி இருந்திருக்கும்.் தொலைபேசி வசதி இல்லை. நாளிதழ்கள் குறைவு. தகவல் சொல்ல வழி இல்லை.

புதுச்சேரியில் எத்தனையோ நண்பர்கள் உண்டு. அந்த நண்பர்கள் முகவரி செல்லம்மாவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. எனவே தபால் போடவும்
இயலாது. போட்டாலும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும் கடிதம் சேர…்இதே போலவே எட்டயபுரம்
உறவுகள், கடையம் உறவுகள் உடனே வந்து சேர .வாய்ப்பு இருந்து இருக்காது. நிதானமாக
தபால் போட்டு ,அந்த கடிதம் கிடைத்த பின்பே உறவுகள் வந்திருக்கலாம்.

பாரதி இறுதியில் பணி புரிந்தது சுதேச மித்திரன் இதழில்தான். அந்த இதழ்
நிச்சயம் பாரதி மரணம் பற்றி செய்தி வெளியிட்டிருக்கும்.்அந்த இதழ் ஒருநாள் கழித்துதான் பொது வெளியில் கிடைத்திருக்கும். ஆனால் அந்த இதழ் மறுநாள்தான் கிடைத்திருக்கும்.
எனவே பாரதி அபிமானிகள் உடனே வந்திருக்க வாய்ப்பு இல்லை

கல்வி என்பது பலருக்கு எட்டாக்கனி அந்நாளில்….்நூறு ஆண்டுக்கு முன் 10 சதவீதம் கற்றவர் இருந்திருக்கலாம்.்அதுவும் மேல் தட்டு வர்க்கமே கற்றது. எனவே மரணம் பற்றிய செய்தியை பாரதி மீது பற்று கொண்ட கல்வி அறிவற்ற
சாதாரண மக்கள் எப்படி அறிய முடியும்..? அறிந்தாலும் அன்றைய பொருளாதார சூழலில் ஒரு சாதாரண பாரதி ரசிகன் சென்னை வர சாத்தியமே இல்லை.்இன்று போல் வேன், பஸ்களில் அன்று வர இயலுமா?
இயலாது.

அப்போது நடந்தது பிரிட்டிஷ் அரசு.்1921 களில் மக்களிடம் அரசு மீது அச்சம் இருந்தது. எனவே அந்த
பகுதியில் அவரை அறிந்தவர்கள்
கூட அவரது இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொள்ள அஞ்சி இருப்பார்கள் என்று என்னால் உணர முடிகிறநு..நடிப்புச் சுதேசிகள் பற்றி ஏற்கனவே பாரதி
எழுதியதே இதற்கு சாட்சி

பாரதி பிறந்ந சமூகம் மிகவும் ஆச்சாரமான சமூகம்.. அந்த சமூகத்தில் மற்ற இடைச் சாதிகள் போல ஒப்பாரி வைப்பது , மறுநாள் எடுப்பது போன்ற நடைமுறை அப்போது இல்லை… விரைந்து சடலத்தை எடுக்க வேண்டும் என்பது அவர்கள் மரபு..அதுவும் ஒரு காரணம்.

சீனிவாச ஆச்சார்யாவின் மகளும்
பாரதியின் அன்புக்கு உரியவரான
யதுகிரி அம்மையார் * அவ்வப்போது வந்து உறவுகள் வந்து விசாரித்தனர் *என்று
தனது பாரதி நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டதையும் இங்கே
நினைவு கூர்கிறேன்

*முக்கியமாக பாரதி அரசு விரோதி என்று பிரிட்டிஷ் அரசால் முத்திரை குத்தப் பட்டவர் என்பது பிரதான காரணம் *
எனவேதான் 11 பேர் அல்லது 12 பேர் வரை இறுதி ஊர்வலத்தில் கலந்திருக்க வாய்ப்புண்டு என்பது என் அனுமானம்.