பாரதியார்/அழகியசிங்கர்

இன்று பாரதியின் நினைவுநாள். பாரதி
யானைத் தள்ளி இறந்தாரா
வயிற்று ஊபாதையால் இறந்தாரா
இதெல்லாம் காலம் காலமாகக் கேட்கப்படும்
கேள்விகள்

அவர்
குறைந்த வயதில் மரணம் அடைந்தது நமக்கெல்லாம் நஷ்டம்

இன்னும் கொஞ்ச ஆண்டுகள்
உயிரோடு இருந்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும்

ஆனால்
இப்போது மோசமாக
எழுதிக் கொண்டிருக்கும்
கவிதைகளைப் படித்துவிட்டு
இன்னொருமுறை அவர் இறந்திருப்பார்