பாரதி எம் உறவு/எஸ்ஸார்சி

தமிழ் மொழிக்கு வீரம்
கொடையாக்கிய மாகவி
பெண்மைக்கு
மகுடம் சூட்டிய மாமனிதன்
சாதிய நஞ்சிற்கு எதிராகச்
சமர் புரிந்த சாகசக்காரன்
கோவில் இருக்கட்டும் ஓய்
பள்ளியை எழுப்பு
படி படி படி
காலை எழுந்தவுடன் படிப்பு பாப்பாவுக்கு
அடித்துச் சொன்ன தயாநிதி
வாழும் இத்தேசம்
ஞாலம் நடுங்க வரும்
கப்பல் செயக்
கனாக்கண்டவன்
உழவனை உச்சிமீது
வைத்துத்தொழுத பேருள்ளம்
பேரண்டம் என் உறவு
பெருவெளி என் வாசம்
தனியொருவனுக்கு உணவிலையா
அழியட்டும் இவ்வுலகு
கர்ஜித்த பொதுவுடமைக்காரன்
காக்கையை நாயை
நேசித்த மாஞானி
தமிழின் இமயம்
பாரதி எங்கள் கண்ணானான்
ஒளிபெற்றோம் யாம்
பாரதியைப்பயின்று அல்லவா
மனிதரானோம்
நீங்களும் நானும்.

One Comment on “பாரதி எம் உறவு/எஸ்ஸார்சி”

  1. பாரதியைப்பற்றிப்பேசப்பேச மனம் கிறங்கிப்போகிறது. அவன் கவிதை வாசித்தவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
    பாரதியாரல் தமிழ் பெற்றது அதிகம்
    தமிழால் அவன் பெற்றதினும்.

Comments are closed.