சிறகு இரவி
நாட்குறிப்பு எழுத உட்கார்ந்த பொழுது
டைரியைத் தேடியும் கிடைக்கவில்லை!
**
நாடோடிக் கலைஞன் கையில் டோலக்கு
பெண்சாதி காதில் புல்லாக்கு!
**
சிலையை அழகாக்க சிதறிய கற்கள்
அதற்கே கூரையான விந்தை!
**
தண்டவாளத்தை துண்டை அடித்தால் வகுப்பு
பெயர்த்தால் பெரும் இழப்பு!
- *
சுவர்க்கோழி போல நான்
யாரும் கேட்பதில்லை என்னை!
- *

Thank you vrutcham