நாகேந்திர பாரதி
கண்ணீர்
—————
பார்த்துச் சிரித்துப் பழகிப் பிரிந்து
காத்து இருப்பது காதல்
குறள் என்பா -2
————————
முதுமை
————-
ஓடிக் களைச்சு ஓஞ்ச உடம்புக்கு
ஆடு புலியே ஆட்டம்
குறள் என்பா – 3
————————
உண்டி சுருக்க ஊறும் அழகு
என்றும் உண்டு ஏழைகட்கு
குறள் என்பா – 4
————————
ஒவ்வொரு கல்யாண மண்டபம் உள்ளும்
வெவ்வேறு கல்யாண விருப்பங்கள்
குறள் என்பா – 5
————————
காற்று வந்து கலைக்கும் வரைக்கும்
நாற்றுப் பயிரில் நாணம்
