மீசைக் கவிக்கு அஞ்சலி


முண்டாசுக்கவிதாசனான பாவேந்தர் பாடலால் பாரதி புகழஞ்சலி:

தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்
பைந்தமிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ. சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படை மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்
என்னென்று சொல்வேன்
எழுத்தில்
சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சுகின்றான்
பாரதி புலவன்
.
.
.
அன்னோன் கவிதையின் அழகையும் தெளிவையும்
சொன்னால் மக்கள் உணரும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற இயலாதென்னுரை
இதனொடு நிற்கவே……..

11092018 அன்று இட்ட பதிவு

முகநூல் பதிவு : ஸ்ரீ என் ஸ்ரீவத்சா