
கடந்து வந்தத் தூரத்தை சிறகுகளில்..
வரிசையாய்க் கட்டிவைத்திருந்த
அப்பறவை..
திசைதிரும்பும் அவசரத்தில்
மோதியப் பேருந்துக் கண்ணாடியில் மெல்ல,
கீழிறங்கிக் கொண்டிருந்தன..
உதிர்ந்த சிறகுகளின்வழியே
தூரமும் சிதறியது…
சுதந்திரமற்ற பெருவெளிக்குள்
கைதுபட்ட காற்றும்
உதிர்ந்த சிறகுகளை தூக்க முடியாமல் தரைகிடத்தியது….
வழிந்து கொண்டிருந்த
உதிரத்தின் வழியே
அனைவருக்குள்ளும்
பறவையின் நினைவுகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
நினைவுகளும்
இறங்கிக் கொண்டிருந்தன…
இறுதியில் ஓட்டுநர்
இறங்கியவுடன்..
மொத்த பாரத்தையும்
சுமந்து வந்தபேருந்து
மௌன அஞ்சலியை
செலுத்தத் தொடங்கியதும்
ஒட்டியிருந்த சிறகுகள்
மெல்லப் படபடக்க
தொடங்கின.

மிக அருமை தோழையே.
பறவைகளின் உயரலைச்சலுக்கு இரங்கல் தெரிவித்த பேருந்தின் அமைதியில்
இனி
பறவையோடு மனிதமும் சிறகை விரிக்கும்.
மிக அருமை தோழையே.
பறவைகளின் உயிரலைச்சலுக்கு இரங்கல் தெரிவித்த பேருந்தின் அமைதியில்
இனி
பறவையோடு மனிதமும் சிறகை விரிக்கும்.