‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா

கட்டுரையில் இருந்து… (11-05-2003)

‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார்.

Life goes on. இந்த அதீதமான சோகத்தை மறக்க, சீக்கிரமே அன்றாடப் பணிக்குத் திரும்புவது முக்கியம். அதையே நினைத்துக்கொண்டு மறுகினால், எண்ணங்கள் நம்மைச் சாப்பிட்டுவிடும்.

இணையத்தில் படித்தது

முகநூலிலிருந்து : ஆர்.கந்தசாமி