வனம் தொலைத்த சீதை

செ.புனிதஜோதி

மனத்தூரிகை

நீர் கோலமாய்
பரவி வடிவமற்று
கோலமாவாய் திரிந்துவிளையாடின…

காட்சிப்பட்டப் பொருள்கள்
கண்ணில் குசலம் விரிக்க
நீர்துளிகளைப் பரிசாய்
தந்துசென்றது…

வெறுமைப் பெற்ற மனப்பரப்பு
கோரைப்புற்களை அறுவடை
செய்துக்கொண்டிருந்தது..

நிசப்தத்தில் சத்தமில்லா
சமர் நிகழ்தேறிக் கொண்டே
நகர்ந்தது.

யுத்தகாண்டம்
சுந்தரகாண்டத்தை
வழிமொழிந்தது..
இருந்தபோதும்

நாளும் சுந்தரங்களை
மனவனத்தில் இன்றளவும்
தேடிக்கொண்டே
இருக்கிறாள் சீதை

One Comment on “வனம் தொலைத்த சீதை”

Comments are closed.