இலுப்பப்பூ சர்க்கரை /ஆர் வத்ஸலா

பொது இடத்தில்
சந்திக்கும் போது
மரியாதை புன்னகை செய்கிறாய்
நமக்குள்
என்றுமே
எதுவுமே
இல்லாதது போல்
கொதிக்கிறது நெஞ்சம்
சுடும் முகத்துடன் கடக்கத்தான்
நினைக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
கடக்கிறேன்
உதிர்த்து விட்டு
ஓர் அசட்டுப் புன்னகையை
உன் போலிப் புன்னகையையும்
இழந்து விடும்
திடமற்று

One Comment on “இலுப்பப்பூ சர்க்கரை /ஆர் வத்ஸலா”

Comments are closed.