
இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது
வரும்போகும் அவ்வளவுதான்
நீங்கள் ஏதோ கேட்க
சம்பந்தமே இல்லாமல்
நான் பதில் சொல்ல
எல்லாம் விதியென்றால்
மனிதனின் சுயம் என்னாவது
கோயில், தேவாலயம், பள்ளிவாசல்
எல்லாம் இருக்கிறது
அங்கே மனிதர்கள் தானே
இருக்கிறார்கள்
அப்போது கடவுள்!
ஆண்டவா போதும்
நாளைக்கு என்னவாகும்
யாருக்குத் தெரியும்
விடிந்ததும் வேதாளம்
தோளில் வந்தமர்ந்து கொள்கிறது
உலகம் ஒரு சிக்கலான இயந்திரம்
அப்பனே இதுக்கு மேல்
ஆராய்ந்தோமானால்
பித்து தான் பிடிக்கும்
வாய்க்காகத்தான் வாழவேண்டி இருக்கிறது
என்னவோ போ
சித்தன் போக்கு சிவன் போக்கு
எல்லோரும் இருக்கின்றோம்
வாழ்கின்றோமா
விசித்திரம் தான்
செத்த வீட்டில்
வாழ்பவர்கள் தானே நாம்
ஏம்ப்பா நீதான் கடவுளா
நம்பவே முடியலை!
கொடுத்து குடி கெடுத்தான்
நாம அதில் சேத்தி இல்லை
நாளைக்கோ இன்னைக்கோ
ஊருக்கு ஊர் தான்
இருக்கிறதே சுடுகாடு
பண்டாரத்திற்கு ஏன்
கையில் திருவோடு
நேற்றும் இல்லை
இன்றும் இல்லை
இருப்பது ஒரு உலகம்
அது நரகம்!
