மகா பொறுமை/ஜெகன் பெ. சாமி

எலும்புத் துண்டுகள்
நாய்க்கு
பிடிக்கும்!
கசாப்புக்
கடைக்காரன்
நாய் வளர்த்தான்!
அவன் வியாபாரம்
முடியும்வரை
காத்துக்
கிடந்தது
அவன் தரும்
எலும்புக்காக!