கொலு/அழகியசிங்கர்

ஒவ்வொரு வீட்டிலும்
கொலு வைத்துவிட்டு
ஒவ்வொருவரையும்
கூப்பிடுவது வழக்கம்
பெரும்பாலோர் கூப்பிட்டாலும் போவது
வழக்கம் கிடையாது

சிலர்
கூப்பிடாமல் வந்து
விடுவார்கள்

தெருவில் சிறுவர்கள் சிறுமிகள் மாலை நேரத்தில் கதவைத் தட்டுவார்கள்
சுண்டல் தந்தவுடன் ஓடிப்போவார்கள்
கொலுவைப் பார்க்க வேண்டுமென்பது முக்கியமில்லை அவர்களுக்கு

பரஸ்பரம் அன்பைத் தெரிவிக்கும்
நிகழ்ச்சிதான் கொலு

கூப்பிட்டாலும் வராதவர்களை
நாம் தப்பாக நினைக்கக் கூடாது

அதைபோல் கூப்பிடாமல் வந்தவர்களை நோக்கி
எரிச்சலடையக் கூடாது

இது கொலு

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டு
அன்பை செலுத்துவது அவசியம்.