இலக்கிய இன்பம் 58/வளவ. துரையன்

ஏழ்மையில் இருக்கும் ஒரு பாணன் ஏதோ ஓர் அரசனைக் கண்டு பரிசில் பெற்று வர எண்ணுகிறான். அவன் செல்லும் வழியில் ஒருவன் யானை மற்றும் புரவிக் கூட்டங்களுடன் பல் அரும்பொருள்களை எடுத்துக் கொண்டு எதிரில் வருவதைக் காண்கிறான். கும்பிடப் போன தெய்வம் நேரில் வந்தது போல் இம்மன்னனையே நாம் பரிசில் கோரலாம் என எண்ணுகிறான்.

தேர், யானை குதிரைத் தொகுதிகளுடன் மற்ற மன்னரின் திரைகளைக் கொண்டு வரும் அரசே! உங்கள் ஊரும் பேரும் என்ன என வினவிகிறான். அதற்கு எதிரில் வந்தவன் நானும் உன்னைப் போன்றவன்தான். வாணபூபதியைக் கண்டு பரிசில் பெற்று வருகிறேன். அதனால் மன்னன் போன்ற செழிப்புடன் உள்ளேன் என்று பாணனை ஆற்றுப் படுத்துகிறான்.

எதிரில் வரும் புலவனை பாணன் மன்னன் என எண்ணுவது அழகான கற்பனை. கம்பர் எழுதிய தனிப்பாடலாக கிடைக்கும் பாடல் இது

”தேருளைப் புரவி வாரணத் தொகுதி
திறைகொணர்ந்து வரும் மன்னநின்
தேசமேதுனது நாமமேது புகல்
செங்கையாழ் தடவு பாணகேள்
வாரும் ஒத்தகுடி நீரும் நாமுமக
தேவன் ஆறைநகர் காவலன்
வாணபூபதி மகிழ்ந்தளிக்க வெகு
நீரிசை பெற்றுலகு புலவன் யான்”

அத்தி நிற்கும் அடையாளமே