
சிலவற்றைப் பார்க்க
ஆசையாய்
இருக்கும். ஆனால்
தொடாதே என்று எச்சரிக்கை ஒலிக்கும்
ஜாங்கிரியைப் பார்த்தால்
நாக்கில் எச்சில் ஊறும்
டேஞ்சர் என்று
மனசுப் படப்படக்கும்
எனக்கு எத்தனைப்
பழங்கள் பிடிக்குமென்று
உங்களுக்கும் தெரியும்
டாக்டர் சொல்லி விட்டார்
இனிமேல் இன்ஜெக்ஷன் தான் உங்களுக்கு
அதுவும் பழக்கமாகி விட்டது
இன்று விருந்து சாப்பிட
உறவினர் வீட்டிற்குச்
சென்றேன்
இன்ஜெக்ஷனை மறந்து விட்டேன்

அருமை
சபலம்