போன கதைஞர்களின் கூட்டத்தில்/அழகியசிங்கர்

போன கதைஞர்களின் கூட்டத்தில் முன் கதை சுருக்கத்தை நான் கூறினேன். மற்றவர்கள் கதைகளின் தன்மையைப் பற்றி பேசினார்கள்.
இதோ முன் கதை சுருக்கம்.

க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதலில் பேசினோம்.

  1. பின்கட்டு என்ற கதை…

இது உடம்பு சரியில்லாமல் இருந்த பாட்டி இறந்து போன கதை.
பாட்டிக்கு எல்லாமாக இருந்த ராஜம் நாலு வருடமாக உதவி செய்கிறாள். பாட்டி போனபிறகு அவளுக்கு வேலையே இல்லாத மாதிரி ஆகிவிட்டது. இது அதைப் பற்றிய கதையா ?
அவள் கூடவே இருந்த உறவினர் பையன் கதையா? படித்தால் சிறப்பாக இருக்கும். நான் லிங்க் அனுப்புகிறேன். நீங்களும் படியுங்கள்.

கதை 2

மழைக்காகக் காத்திருந்தவன்

இதுவும் க்ரியா ராமகிருஷ்ணன் கதை

தைப்பாக்கம் என்ற இடத்திற்கு இரண்டு மணி நேரம் நடந்து போகிறான் ஒருவன். அங்கு எங்கு பார்த்தாலும் சிதிலமடைந்த குடிசை வீடுகள். பின் அங்கிருந்து திரும்பி வர முயற்சி செய்கிறான். திரும்பி வர முடிந்ததா..பரபரப்பாக எழுதி இருப்பார். ஒரு திகில் கதையைப் படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

கதை 3

அவளிடம் சொல்லப் போகிறான்

என்ன சொல்லப் போககறான்? தான் காதல் வசப்பட்ட பெண்ணைப் பார்த்து I shall have nothing to do with you என்று சொல்லப் போகிறான். அவள் இருந்த இடத்திற்குப் போகிறான். ஆனால் அவளைப் பார்த்து சொல்ல முடிந்ததா. அற்புதமான கதை அற்புதமான நடை.