கண்ணாடியே… கண்ணாடியே…/ஸ்பைக் மில்லிகன்

தமிழில் : க. மோகனரங்கன்


பருவத்தின் மிருது கூடின
இளம் பெண்
தன் மகிழ்வின் கூந்தலை
வாரி முடிக்கிறாள்
‘ நீ மிகவும்
அவலட்சணமாக இருக்கிறாய்’
என்கிறது கண்ணாடி.
ஆனாலும்
அவளுடைய உதட்டில்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
கள்ளமானதொரு புன்னகை.
‘ நீ அழகானவள் ‘ என்று
அன்று காலையில்தான்
அந்த கண்பார்வையற்ற பையன்
அவளிடம் சொல்லியிருந்தான்.