Skip to content
- என் வாழ்க்கையில்
காந்தியைப் பார்த்ததில்லை - காந்தியைப்
பற்றி கேட்டிருக்கிறேன் - ஒவ்வொரு ஆண்டும்
அவர் பிறந்தநாளன்று
கோட்ஸேவாக நாம் மாறி
காந்தியைச் சுட்டு வீழ்த்துகிறோம் - காந்தியைத் திரும்பவும்
உயிர்ப் புதுப்பித்து
நம் முன்னால் வலம் வருகிறார் - அவர் ஒரு காந்தியவாதி
என்று கிண்டல் செய்ய
கற்றுக் கொண்டோம் - எங்கள் வீட்டுக் கொலுவில் அத்தனைப்
பொம்மைகளின் நடுவில் காந்தி பொம்மை இல்லை - ஏன் என்று கேட்டேன்
மனைவியிடம் - ஓவியர் ஆதிமூலம் வரைந்த காந்தியைப்
பார்த்திருக்கிறீர்களா - பேரனைக் கேட்டேன்
காந்தியைத் தெரியுமா
அவனுக்கும் தெரியாது
எனக்கும். - காந்தியைப் போற்றுவோம்
காந்தியைப்
போற்றுவோம்