அக்டோபர் 2/சஞ்சயன்

புழுதி மேக புகைமண்டலத்திடையே
அடிப்பொடிகள் புடைசூழ
பத்து கார்களில் வந்திறங்கிய திருவாளர் பிரபலம்
மாலைகளும்
மலர்க் கொத்துகளும் பொன்னாடைகளும்
பலமுறை வழிமறிக்க மீண்டு
சிவப்புக் கம்பளத்தின் மீது மேடை வரை நடந்து சென்று
திறந்து வைத்தார் ..
பசித்த பின் புசித்து
மானம் காக்க
மட்டுமே உடுத்தி
ஆடம்பர வீடு துறந்து
தேசத்திற்காக
மட்டுமே வாழ்ந்த
ஓர் அரை நிர்வாணப்
பக்கிரியின்
உருவப் படத்தை