ம.சக்திவேலாயுதம் கவிதை

தந்தையை பிடிக்காத
மகனுண்டோ?!
அதிலும் நீங்கள்
தேசத் தந்தையாயிற்றே!

தாகூர் கண்ட மகாத்மாவே
எங்கள் இந்திய தேசத்தின்
ஆகச்சிறந்த புனிதர்
நீங்கள்தான்!

எங்கள் பாரதியைப் போல
எங்கள் பாரத தேசத்தை
நேசித்து பூசித்த
தேசப்பிதா நீங்கள் ஒருவரே!

சத்தியம் மட்டுமே
இங்கே சாத்தியம்
என்ற கொள்கையோடு
வாழ்ந்த ஒரே சத்தியவான் நீங்களே!

நேர்மையும் துணிவும்
அகிம்சையும் போராட்டமும்
உங்கள் அடையாளம் மட்டுமல்ல
நம் இந்தியாவின் பெருமிதம்!

மகான்களாயல்ல..
உங்கள் மகன்களாய்
நாங்கள் வாழ்ந்தால் போதும்..
இந்த காந்திய தேசத்தில்!

உம்மை நினைத்தபடி
சபதங்கள் பல ஏற்கிறோம்…
கொள்கைகளோடு கொள்கைகளாய்
காற்றில் பறந்து கொள்கிறோம்!

புண்ணிய தேசத்தின்
புண்ணியவானை
நினைத்துக் கொள்கிறோம்
அக்டோபர் 2ல் மட்டுமே!