வைகுண்டம்/க.நா.சு

வைகுண்டத்து
வாசல்
செல்லரித்தது
போகப்
பாக்கி
க்றீச்
சிட்டுத்
திறந்து
நிற்கச்
சிங்க
ராச்சாரி
யார்-யார்
அவர்?-அவர்
யாரோ-
தெரு
வெல்லாம்
மூ
ணு

ரி
சை
க்யூ
நிற்க
ஆண்
டொன்
றொன்
றொன்
றாகக்
கழிய
ஐம்
பத்
திரண்டும்
போக
எஞ்சி

இரு
பத்
தெட்டும்
பத்தும்
நீண்டு

வை
குண்டத்து
வாசல்
செல்லரித்தது
போகப்
பாக்கி
கூட்டத்திலே
அவளை
கை
விட்டு விட்டேன்
-நழுவி
விட்டாள்-
கண்ட
துண்டோ
ஜெகத்தீரே

பட்டினிப்
பட்டாளம்
தின்று
ஜெரித்து
துவாதசி
கண்டதோ!

எனை
விட்டு
எங்கேயோ
நீங்கிப்
போனாளே
ஐயகோ!

எனத்
தேடி
வந்த
சோமுவும்

வை
குண்ட
வாசல்

டந்து
(முதல் அடி
கால்
தடுக்க)
உள்
நின்று

பிம்ருதி
ப்பார்க்க
காணாது
கண்டு
கண்டது
கொண்டு

செல்
போக
பாக்கி
சாத்திய
கதவும்
கா
லால்
உதைக்கத்
திறக்கும்
ஏனோ
காத்
திருக்கிறீர்?

ஏனோ
காத்
திருக்கிறீர்?

ஏனோ
நாளும்
கோளும்
ஏனோ
மீனும்
வானும்
நேரம்
தேதிக்
கணக்
கெடுத்து

நிகர
லாபமும்
எண்
பத்தி
நாலு
ஆண்டு
என்று
கண்ட
வைகுண்டம்
வாசல்
திறக்கும் –
துருப்
பிடித்துக்
கிறீச்சிடும்!

தாண்டி
விட்டால்
பிம்ருதீ
பார்க்க
இயலாது
ஏலாதி

  • யார்
    மு
    ப்

    து

    ரி
    சை
    க்யூவும்

கூடி
விட்டது
காண்!

வைகுண்ட
வாசல்
தாண்ட
செல்
லரித்த
கன
மான
மரம்
கதவாய்க்
கிறீச்சிட

காத்
திருந்த
க்யூவும்
கரையாது –
காண்!

(இலக்கிய வட்டம் – 27.03.1964)