பூதம் ….1/அழகியசிங்கர்

பக்கத்தில் யாரோ உட்கார்ந்தார் போலிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணுக்கு ஒண்ணும் புலப்படவில்லை.
‘ம்..’ என்று சத்தம் கேட்டது.
‘யார் என்று கேட்டேன்’
‘பூதம்’
‘பூதமா’
‘ஆமாம்’
‘என்ன வேண்டும்?’
‘கேட்பதைக் கொடுப்பேன்’
‘ம்..ம்..’
‘சரி.. 20 வருஷமா டயாபடீஸ் நோயால் அவதிப் படறேன்..சரியாப்
போகணும்…’

‘சாரி..என்னால சரி பண்ண முடியாது. ஏன் டாக்டரால கூட முடியாது..’.

‘என்ன பூதம் நீ..சரி ஹைபர் டென்ஷனை சரி செய்ய முடியுமா?’

‘Chance இல்ல..அது இன்னொரு நோய்..’

‘அப்ப..என்ன பூதம் நீ..’

‘வேற கேள்..’

கொஞ்சம் யோசித்தேன். ‘ரொம்ப நாளா எங்களுக்கு ஓர் ஆசை..’
‘அதான் போஸ்டல் காலனியா..’
‘ஆமாம்..’
“எல்லோரும் விரும்பும்படியா இடம் கிடைக்குமா?”
“எப்படிக் கிடைக்கும். சின்ன இடமாச்சே?”

பூதம் ஒரு நிமிடம் கண்ணை மூடியது.
” இப்பப் போய்ப் பார்..”
போய்ப் பார்த்தேன். பிரமித்து விட்டேன். போஸ்டல் காலனி வீடே 18 மாடி கட்டிடமாக மாறி விட்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் முழுவதும் கட்டிடம்.

மீரா ரங்கன்
குடும்பத்துக்கு மாத்திரம் இரண்டு தளத்தில் வீடு.
“ஏன்?” என்று கேட்டேன் பூதத்திடம்.
“இல்லாவிட்டால் அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.”
புதியவர்கள் பலரும் இருந்தார்கள். 18வது மாடியில் என் அடுக்ககம்.
18வது மாடியிலிருந்து பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தேன். 17வது மாடியிலிருந்து அனந்தராமன் என்ற இன்னொரு ஓனர் கை ஆட்டிச் சிரித்தார்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி.
பூதம் ‘எதாவது வேலை கொடு’ என்றது.
‘நாய் வாலை நிமிர்த்த வேண்டியதுதான்’ என்றேன்.
வாலையை அறுத்துக் கொண்டு வந்து விட்டது பூதம்.