
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
ஆயுதம் தேவையென்றால்
எளியவன் நான் என்ன செய்வேன்.
சக்தியிடம் ஆயுத்தைக்
கொடுத்த முச்சாமிகளும்
பொம்மையானார்
என்றாரே
அந்தச் சாமியிடம்
நீதி கேட்பேன்.
வீடெங்கும் சக்திகள்
விரும்பிய ஆயுதங்கள்
தலையை எங்குப்போய்
ஔித்துவைப்பேன்.
நடுகல் நட்டுவச்சு
நாலுபக்கம்
பொட்டு வச்ச வாழ்ந்த காலத்தை
எங்ஙனம் மீட்டெடுப்பேன்.
வரத்தைக் கொடுத்துவிட்டு
அறத்தை மீட்டெடுக்க
ஆயுதமா.. ?
சாமிக்கும் கேள்வி வைப்பேன்.
அன்றுபோல் அரக்கர்கள் இன்று
தனித்தில்லை என்றாலும்…
அவரவர் உள்மனங்களில் அரக்கரென்பேன்.
இனி எந்தச்சாமியிடம் ஆயுதத்தைக் கடன்
வாங்கி மானிடத்தை மீட்டெடுக்க
வரம் கேட்பேன்….?
