க.நா.சுவின் கவிதை

எங்கேயோ
தேடிவந்து
எப்படியோ
எட்டிவிட்டார்.
கையில் அகப்
பட்டதை விட்டு
விடவா மனசு
வரும்! கெட்டி
யாகப் பற்றிக்
கொண்டார் –
வீம்பு பேசுகிறார்
தேடிக் கண்டேன்
வேறுயார் தான்
காண்பவர் என்பார்
-கண்டது என்ன
என்று தான்
விளங்கவில்லை.


இலக்கிய வட்டம்
27.03.1964

4