கொலு/சுரேஷ் ராஜகோபால்

வருடந்தோறும் புரட்டாசி மாதத்தில்

வரும் கொலு திருநாளில்

வண்ண பொம்மைகளை அடுக்கி

வைத்தால் மட்டும் போதுமா?

மாக்கோலம் மலர்க்கோலம் இட்டு

தினமொரு சுண்டல் நெய்வேத்யம்

போதாதென்று, வண்ணத் தமிழில்

கவிபாடி வழிபாடு நன்றே.

04/10/2022