
நான்கு சுவரைத்தாண்டி
சாளரக் கம்பிகளின்வழியே…
காற்று கைப்பற்றி
எடுத்து வந்து தருகிறது…
மியாவ்..மியாவ்
எனும் ஈனஸ்வரத்தை
இரண்டு நாட்கள்
முனகல்களில்
உறக்கம் கலைந்து
எழுகிறேன்
பெற்றத் தாயைப்போல..
ஆறறிவென்ன?
ஐந்தறிவென்ன?
பிரசவம் என்பது
மறுப்பிறப்பு தானே.
குட்டிகளில் ஒலிகளை
மீண்டும் காற்று கைப்பற்றி
தரும்வரை…
நானும் மருத்துவமனையின்
வாசலில் உலாத்தும்
ஜீவனைப்போல ..
என் செவி பொருத்தி
வைத்துள்ளேன்
சாளரத்தின் கம்பிகளூடே
