பல்லியும் முதலையே/க நா சு

பல்லியும் முதலையே
பாட்டும் மோனமே
வாழ்வும் சாவிலே
இருளும் ஒளியில்தான்.

தொலையும் அருகிலே
எல்லையும் கண்ணில்தான்,
வட்டமும் மையப்புள்ளியிலே
புல்லும் மூங்கிலே

உள்ளதும் மாயமே காண்
உடையதும் இலாததுவே
கசப்பதும் சர்க்கரைதான்
உண்மையும் பொய்யலவோ

பல்லியும் முதலையே
புல்லும் மூங்கிலே.

பல்லியும் முதலையே
புல்லும் மூங்கிலே
மனிதனும் தெய்வமே

தெய்வமும் மனிதனே
மூங்கிலும் புல்லுதான்
முதலையும் பல்லியே.