ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 23

19.10.2021 – செவ்வாய்க் கிழமை


அழகியசிங்கர்

அழகியசிங்கர் :  இருவருக்கும் வணக்கம்.

ஜெகனும், மோகினியும் : வணக்கம்.

அழகியசிங்கர் :  வரும் சனிக்கிழமை அ.முத்துலிங்கம் சிறுகதைகளையும், ரேவதி பாலு சிறுகதைகளையும் எடுத்துப் பேசப் போகிறோம்.

மோகினி :  நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் எழுத்தாளரையும் ஆண் எழுத்தாளரையும் கூப்பிட்டுக் கதைஞர்கள் கூட்டம் நடத்துகிறீர்கள் இல்லையா?

ஜெகன் :  30க்கும் மேற்பட்ட கதைஞர்களின் கூட்டம் நடத்தி விட்டீர்கள்.

அழகியசிங்கர் : இதன் மூலம் சிலர் கதைகளைப் பற்றிப்பேசத் தூண்டுகிறேன்.

ஜெகன் :  சமீபத்தில் உயிர்மையில் தேவதச்சன் கவிதைகளைப் படித்தேன்.

அழகியசிங்கர் :  அம்மாவின் உணவுகள் என்ற கவிதையைப் படித்தேன்.

மோகினி :  சிலர் மட்டும் எப்போது எழுதினாலும் திறமையாகவே கவிதைகள் எழுதுவார்கள். அழகியசிங்கர் : அந்தக் கவிதையை எடுத்து இப்போது படித்துப் பார்க்கலாம்.

அம்மாவின் உணவுகள்


குழந்தை 

பள்ளியிலிருந்து

திரும்பியதும்

அம்மா

அவசரமாக அவளது

டிபன்பாக்ûஸத்

திறந்து பார்ப்பாள்

பிறகு மாற்றுடை 

போட்டுவிடுவாள்

மிச்சமிருக்கும் டிபனை

சாப்பிடுவாள்

நின்று கொண்டே..


ஜெகன் :  எளிமையாக எவ்வளவு சிறப்பாக எழுதி உள்ளார்..

அழகியசிங்கர் : தினமும் நடக்கிற நிகழ்ச்சியைத்தான் பதிவு செய்கிறார்.  எத்தனையோ விஷயங்களைச் சொல்கிறார். .  இந்தக் கவிதையில் குழந்தை மிச்சம் வைத்து விட்டு டிபன் பாக்ஸ்  எடுத்துக் கொண்டு வருகிறாள் என்று அம்மா குழந்தையைத் திட்டவில்லை. 

மோகினி :  நின்றுகொண்டே சாப்பிடுகிற மாதிரி ரொம்ப குறைவாகவே டிபன் பாக்ஸில் டிபன் இருப்பதாகக் கூறுவதுபோல் தோன்றுகிறது. 

அழகியசிங்கர் : இன்னும் பலருடைய கவிதைகளையும் படித்துப் பார்க்க வேண்டும்.

ஜெகன் : கடற்கரய்யின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி’ நீங்கள் திரும்பவும் படித்து முழுவதும் எழுத வேண்டும்.

அழகியசிங்கர் : ஆமாம்


மோகினி : இன்றைய சொற்பொழிவு முடிந்து விட்டது.  நாளை சந்திப்போம்.

அழகியசிங்கர் : (கை கூப்பியபடியே) சந்திப்போம்.