(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் வாசித்த கவிதை )

- முந்துதல்
திரை போட்டுவிட்டார்கள்
அடடா, சற்று முந்தி வந்திருக்கலாமே
என்றார் அவர்.
முந்தி ப் பழக்கமில்லை
என்றவுடன் ஏனோ முறைத்தார்.
முணுமுணுவென்று சொல்லிக்கொண்டே
எங்கோ போனார்
அதிலும் நான் பிந்தியவன் தான்.
- கைவிடல்
இன்று ஒரு கச்சேரிக்குப் போக வேண்டும்
அந்தத் தோற்றத்திற்கான உடுப்பை நீவ
கடைக்கு எடுத்துச் சென்றால்
அன்று விடுமுறையா ம்
கையால் இழுத்து மடித்து போட்டுக் கொண்டு
போனால்
பாடகர் குரலும் சுருதியுடன் மல்லாடியது
