
கண்மாய்க் கரையோரம் கரும்புத்
தோட்டம்
போகும், பொட்டல் வெளியிலே
எட்டி நடை
போட வைக்கும்.
பொழுது சாயும் நேரம் பூத்த
மஞ்சள்
வாங்கி மலைக்காடு தாண்ட
வனதேவி
வேண்டல் வைக்கும்.
சுள்ளி ஒடித்து சும்மாடு தாங்கி
கைக்குழந்தை
இடுப்பில் தூக்கி வேகம் கூட்டும்
மங்கை
மனம்
உள்வாங்கி உதவும்.
வயற்காடுகளில், சுற்றி வரும்
வாய்க்காலில்,
தோட்டந் துரவுகளில் போக வர
ஏகபோக
உரிமை இதற்குண்டு.
கொடும்புலி,சிங்கம், நரி,ஓநாய்
கானகத்து
யானை, சிலவேளை மனித
மிருக பயம்
மங்கையருக்கு அன்று.
இன்று
பளபளக்கும் எட்டு வழி, நான்கு
வழிச்
சாலைகள் உள்ளங்கை ரேகை போல்.
ஒதுங்கி
வழிவிட்டனவோ
ஒத்தையடிப் பாதைகள்.
