சினம்கொண்ட கடவுள்/ ஸ்டீபன் க்ரேன்

மொழிபெயர்ப்பு : க.மோகனரங்கன்


சினம் கொண்ட கடவுள்
அப்பாவி மனிதனொருவனை
அடித்து உதைக்கிறார் ,
இடிபோலும் குத்துகளால்
வலுவாகத் தாக்குகிறார் .
அவ்வோசை உலகெங்கும்
உருண்டோட ,
ஒடிவருகின்றனர் மக்களெல்லோரும் .
வலி பொருத்திடாமல்
அலறிய அம்மனிதன் ,
தடுமாறிபடி
கடவுளின் காலடியில்
மடங்கி விழுகிறான் .
“ஆ! எவ்வளவு இழிவான மனிதன்?”
கூறிய கூட்டம் மேலும் கூவியது
“ஆ! எவ்வளவு வலிமையான கடவுள்!”.