பூனையின் மரணம்/அழகியசிங்கர்

நடுத்தெருவில்
ஒரு
பூனை
இறந்து கிடந்தது
தூங்குவது
போலிருந்தது அதன்
தோற்றம்
இறந்து போன
பூனையைப்
பற்றி வருத்தப் படுகிற
மனிதர்கள்
யாராவதுண்டா

நடு ரோடில் அதைப்
பார்த்தவுடன்
முகம் சுளித்து
கொள்கிறார்கள்

சிலர் மூக்கைப்
பொத்திக்
கொள்கிறார்கள்

சிலர் அதன்
பக்கத்தில் வராமல்
ஒதுங்கிக் கொண்டார்கள்

நானும்
ஒதுங்கித்தான்
சென்றேன்.

ஏனோ தெரியவில்லை
போட்டாவில்
க்ளிக் செய்தேன்

அதன் மரணம்
பரிதாபம்தான்
பரிதாபம்தான்