
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகம் படித்து முடித்தேன். அதன் பிறகு திரும்பவும் படிக்க வில்லை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கதை கொஞ்சங் கூட ஞாபகமில்லை. வந்தியதேவன், ஆழ்வார்கடியன் என்ற பெயர்கள் மட்டும் ஞாபகம் இருக்கிறது.
அந்தக் காலத்தில்
வந்தியதேவன் கதாபாத்திரத்திற்கு எம்.ஜி.ஆர்தான் சரி என்று நினைப்பதுண்டு.
மணிரத்னத்தின் இந்தப் படம் எல்லாவிதத்திலும் சிறப்பு.
பொதுவாக மணிரத்னம் இந்தப் படத்தை இயக்குகிறார் என்று அறிந்தவுடன் கல்கியின் கதை இன்னும் சிறப்பு அடையப் போகிறது என்று நினைத்தேன். அதேபோல் சிறப்பு அடைந்து விட்டது.
எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு கதையை அவ்வளவு சுலபமாக யாரும் எடுத்து விட முடியாது.
மணிரத்னம் மாதிரி திறமையான இயக்குநர்தான் எடுக்க முடியும்.
படம் பார்த்தபோது தமிழ் சரியாக உச்சரிக்கவில்லை என்ற குறையை நான் கவனிக்கவில்லை.
எந்த இடத்திலும் இந்தப்படம் பார்க்க அலுப்பு தட்டவில்லை. அதுவே படத்தின் வெற்றியாகக் கருதுகிறேன்.
நான் திரும்பவும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன்.
