
எரிந்த கட்டை மீது எரித்து
பட்டினத்தார் பாடல்
“நான்” எனும் கர்வம் பலரிடம் காணப்படும் ஒன்றாகும்.
சுகங்களையும்,உறவையும் சேர்த்த சொத்தையும் விட்டு ஒருநாள் போய் தான் ஆக வேண்டும்
அரசனாய் இருந்தாலும்..இறந்த பின்..முன்பு ஏதேதோ உடல்களை எரித்த அதே
இடத்தில் வைத்து..உனது உள் ஆடைகளையும் எடுத்து விட்டு எரித்து
சாம்பலாக்கி இருக்கிறார்கள்..எனும் போது நாம் எல்லாம் எம்மாத்திரம்?
அதை எல்லாம் பார்த்த பின்னும் , இந்த வாழ்க்கையில், இந்த சுக போகங்களில்,
இந்த பிறவியில் இன்னுமா உனக்கு ஆசை என்று கேட்க்கிறார் பட்டினத்தார்…
பாடல்
இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே ?
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை – முன்னம்
எரிந்தகட்டை மீதில் இணைக்கோ வணத்தை
உரிந்துருட்டிப் போட்டது கண்டு !
பொருள்
இன்னம் = மீண்டும் மீண்டும்
பிறக்க இசைவையோ = பிறப்பதற்கு ஒத்துக் கொள்வாயா
நெஞ்சமே = மனமே
மன்னர் இவர் என்றிருந்து வாழ்ந்தாரை = மன்னர் இவர் என்று வாழ்ந்தவர்களை
முன்னம் எரிந்தகட்டை மீதில் = முன்பு எரித்த கட்டை மேல்
இணைக்கோ வணத்தை = கட்டியிருந்த உள் ஆடையையையும்
உரிந்துருட்டிப் = உரித்து எடுத்து பின் அந்த உடலை உருட்டி
போட்டது கண்டு = போட்டதை கண்ட பின்னும்
-
