அவரவர்க்கு/ஜெகன் பெ சாமி

ஒரு செய்தி தான்
ஊரெங்கும் பரவியது
அவரவர் சிந்தனை
நாளை
செடிகள் உயிர் பெறும்!
தெருவோரக்கடை போட முடியாதோ?
பள்ளிக்கு விடுமுறை தருவார்களா?
குறித்த நேரத்தில் ஊருக்கு செல்ல முடியுமா?
குடிசை வீட்டில்
என்ன செய்யலாம்?
தெருவில் வண்டி ஓட்ட முடியுமா?
வீட்டுக்குள் தண்ணீர் வந்து விடுமா?
அடுத்த மூன்று மாதங்களுக்கு
தொட்டியில் நிரப்பிக் கொள்ளலாமா?
மறுநாள்
வழக்கம்போல வானம் இருந்தது!