பயணம்/க.நா.சு.

“அவசரமென்றாலும் கூட
நான்
ஏரோப்ளேனிலோ
எக்ஸ்பிரஸ் ரெயிலிலோ
பயணம் போவதை
விரும்பமாட்டேன்
கட்டுச் சாதம்
கட்டிக் கொண்டு,
போகும் வழியெலாம்
சண்டைச் சச்சரவுகள்
சல்லாபங்கள்
தொடர்ந்துவரப்
பயணம்
செய்வதே
பயணம்.
எந்தப் பயணமும்
பதினாலு ஆண்டுகளுக்குக்
குறைந்ததாக
இருக்கக்கூடாது,
அப்போதுதான்
ராமன்
அயோத்தி
திரும்ப இயலும்.”