அப்பாவின் கைக்கடிகாரம்

சுஜாதா

அப்பாவின் கைக்கடிகாரம்
பார்க்கவே பெரியதாக
இருக்கும்.

அப்பாவின்
சுறுசுறுப்பில் அவையும்
வேகம் அடையும்.

காலை காபி முதல்
இரவு முழுவதும் விழித்திருந்து சேவை செய்து கொண்டிருக்கும்.

குடும்பத்தினர் அனைவரின்
மகிழ்ச்சி தென்றலாய்
உலா வரும்.

ஊரின் கடைக்கோடியில் உள்ள
மனிதனுக்கும் உதவி
செய்யும் உயர்ந்த
உள்ளம்.

இன்றும் என் வீட்டின்
அடையாளம் என்
அப்பாவின் கைக்கடிகாரம்.

பல நூறு ஆண்டுகள் கழித்தும்

என்றும் நினைவில் நிற்கும்
அப்பாவின் கைக்கடிகாரம்.